Wednesday, November 20, 2013

காற்றின் கோவம்!!!



காற்றுக்கு என் மீது கோபம் .........

காரணம் என்னவென்றால் .............

சுவாசிப்பது என்னை ..............

நேசிப்பது அவளையா  என்று....... 

கணவன் சொல்லே மந்திரம்!!!


பொதுவாக ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அனைத்து கணவர்களும் தன்னுடைய மனைவிக்கு உதவுவதும் பெண்கள் தங்கள் கணவனுக்கு பிடித்ததை கேட்டு சமைப்பதும் பல வீடுகளில் உள்ள வழக்கம் ....
இதுவும் அதுபோலத்தான் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கணவனும் மனைவியும் சேர்ந்து அங்காடி(market) சென்றனர் அப்போது....

மனைவி : உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க அதையே இன்னைக்கு சமைத்து தருகிறேன் என்றால் ....

கணவனும் : மீன்குழம்பு ....
மனைவி : இங்க கடல் மீன் இல்லங்க உங்களுக்கு ஆத்து மீன் ஒத்துகாது .....
கணவன் : கறிகுழம்பு .....
மனைவி : உங்களுக்கு ஆடு புடிக்காது கோழி போன வாரந்தா வெச்சே ...
கணவன் : சாம்பார் :
மனைவி : சம்பளம் போட்ட நாள்ல இருந்து பத்து தடவ வெச்சாச்சு ......
கணவன் : பூரி கிழங்கு ...
மனைவி : மதிய சாப்பாட்டுக்கு ஒத்து வராது ....
கணவன் : ரசம் ...
மனைவி : அதுக்கு தொட்டுக்க எதாவது வைக்கணும் ரெண்டு வேல ....
கணவன் : கீற ....
மனைவி : நேத்து வெச்சே மறந்து போச்சா...
கணவன் : தயிர் சாதம் ..
மனைவி : உங்களுக்கு ஜலதோஷம் ...
கணவன் : புளிசாதம் ..
மனைவி : வெயில் காலத்துல புலி ஒத்துக்காது ...
கணவன் : இட்லி தோசை ....
மனைவி : அதுக்கு நேத்து சொல்லிருக்கணும் ...

கணவன் : என்னதாண்டி சமைக்கபோற ....

மனைவி : நீங்க என்ன சொல்றிங்களோ அதையே சமைச்சு தர்றேங்க..

கணவன் : No need to remove any nail's....

மனைவி : அப்படின்னா ????

கணவன் : ஆணியே ..........புடுங்கவேணா.....


Tuesday, November 19, 2013

கணவன் மனைவி இடையில் ஒரு பூனை..



மனைவிக்கு பிடித்த பல விஷயங்கள் கணவர்களுக்கு பிடிப்பதில்லை ..
அப்படித்தான் ஒரு வீட்டில் மனைவிக்கு பிடித்த ஒரு பூனை இருந்தது ...அது அவள் கணவனுக்கு பிடிக்கவில்லை... 


ஒரு நாள் கணவன் தன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளுக்கு பிடித்த பூனையை ஒரு தெரு தள்ளி விட்டுவிட்டு வீடு திரும்பினான் ..
வரும் வழியில் அவன் நினைத்தது இனி மனைவிக்கு பிடித்தது நான் மட்டும்தான் ...ஆனால் அதிசயம் அவன் வீடு வருவதற்குள் அந்த பூனை வீட்டில் இருந்தது .... 


சில நாள் கழித்து மறுபடியும் அந்த பூனையை இரண்டு மூன்று தெரு தள்ளி தள்ளி விட்டுவிட்டு வீடு திரும்பினான் ..
வரும் வழியில் அவன் நினைத்தது இனி மனைவிக்கு பிடித்தது நான் மட்டும்தான் ...... ஆனால் அதிசயம் அவன் வீடு வருவதற்குள் அந்த பூனை வீட்டில் இருந்தது ....


இரண்டு மூன்று நாள் கழித்து தன் காரில் அந்த பூனையை வைத்துகொண்டு இடது வலது சந்து இடுக்கு என காரை ஓட்டிச்சென்று பூனையை இறக்கிவிட்டான் .....

சிறிது நேரம் கழித்து அவன் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது அதில் ...


கணவன் : உன் பூனை வீட்டிற்கு வந்துவிட்டதா என்று ஒரு கேள்வி????
மனைவி : அவளும் வந்துவிட்டது என்றால் ...
கணவன் : அந்த பூனையிடம் தொலைபேசியை கொடு ....
மனைவி : எதற்கு...????
கணவன் : வீட்டிற்கு வர வழி தெரியவில்லை ....

பூனை : !!!!!!!!!!!!! ஹி ஹி ....

Sunday, November 17, 2013

பொய்யான உலகம்!!!

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்..

ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான்..
தொழிலதிபர்:- ஏன்டா லேட்டு ?? எங்கட போயிருந்த??
மகன்:- அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன்
ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ...


கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்:- ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ
மகன்:- மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமா பார்க்க போயிருந்தேன்


தொழிலதிபர்:- டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்ட.. நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ????
ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது ...


இதை பார்த்து லேசான புன்னகையுடன் வந்த தொழிலதிபரின் மனைவி:- என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..
இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது!!!!!


Saturday, November 16, 2013

எங்கள் வாயே எங்களின் முதல் எதிரி...


காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து

பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து.அதனுடைய கருத்தைக் கேட்டது.ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,''கொஞ்சம் கூட

நாறவில்லை,''என்றது.சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.நரி சொன்னது,''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

Vetri..