பொதுவாக ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அனைத்து கணவர்களும் தன்னுடைய
மனைவிக்கு உதவுவதும் பெண்கள் தங்கள் கணவனுக்கு பிடித்ததை கேட்டு சமைப்பதும்
பல வீடுகளில் உள்ள வழக்கம் ....
இதுவும் அதுபோலத்தான் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கணவனும் மனைவியும் சேர்ந்து அங்காடி(market) சென்றனர் அப்போது....
மனைவி : உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க அதையே இன்னைக்கு சமைத்து தருகிறேன் என்றால் ....
கணவனும் : மீன்குழம்பு ....
மனைவி : இங்க கடல் மீன் இல்லங்க உங்களுக்கு ஆத்து மீன் ஒத்துகாது .....
கணவன் : கறிகுழம்பு .....
மனைவி : உங்களுக்கு ஆடு புடிக்காது கோழி போன வாரந்தா வெச்சே ...
கணவன் : சாம்பார் :
மனைவி : சம்பளம் போட்ட நாள்ல இருந்து பத்து தடவ வெச்சாச்சு ......
கணவன் : பூரி கிழங்கு ...
மனைவி : மதிய சாப்பாட்டுக்கு ஒத்து வராது ....
கணவன் : ரசம் ...
மனைவி : அதுக்கு தொட்டுக்க எதாவது வைக்கணும் ரெண்டு வேல ....
கணவன் : கீற ....
மனைவி : நேத்து வெச்சே மறந்து போச்சா...
கணவன் : தயிர் சாதம் ..
மனைவி : உங்களுக்கு ஜலதோஷம் ...
கணவன் : புளிசாதம் ..
மனைவி : வெயில் காலத்துல புலி ஒத்துக்காது ...
கணவன் : இட்லி தோசை ....
மனைவி : அதுக்கு நேத்து சொல்லிருக்கணும் ...
கணவன் : என்னதாண்டி சமைக்கபோற ....
மனைவி : நீங்க என்ன சொல்றிங்களோ அதையே சமைச்சு தர்றேங்க..
No comments:
Post a Comment