மனைவிக்கு பிடித்த பல விஷயங்கள் கணவர்களுக்கு பிடிப்பதில்லை ..
அப்படித்தான் ஒரு வீட்டில் மனைவிக்கு பிடித்த ஒரு பூனை இருந்தது ...அது அவள் கணவனுக்கு பிடிக்கவில்லை...
ஒரு நாள் கணவன் தன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளுக்கு பிடித்த பூனையை ஒரு தெரு தள்ளி விட்டுவிட்டு வீடு திரும்பினான் ..
வரும் வழியில் அவன் நினைத்தது இனி மனைவிக்கு பிடித்தது நான்
மட்டும்தான் ...ஆனால் அதிசயம் அவன் வீடு வருவதற்குள் அந்த பூனை வீட்டில்
இருந்தது ....
சில நாள் கழித்து மறுபடியும் அந்த பூனையை இரண்டு மூன்று தெரு தள்ளி தள்ளி விட்டுவிட்டு வீடு திரும்பினான் ..
வரும் வழியில் அவன் நினைத்தது இனி மனைவிக்கு பிடித்தது நான் மட்டும்தான் ...... ஆனால் அதிசயம் அவன் வீடு வருவதற்குள் அந்த பூனை வீட்டில் இருந்தது ....
இரண்டு மூன்று நாள் கழித்து தன் காரில் அந்த பூனையை வைத்துகொண்டு இடது
வலது சந்து இடுக்கு என காரை ஓட்டிச்சென்று பூனையை இறக்கிவிட்டான் .....
சிறிது நேரம் கழித்து அவன் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது அதில் ...
கணவன் : உன் பூனை வீட்டிற்கு வந்துவிட்டதா என்று ஒரு கேள்வி????
மனைவி : அவளும் வந்துவிட்டது என்றால் ...
கணவன் : அந்த பூனையிடம் தொலைபேசியை கொடு ....
மனைவி : எதற்கு...????
கணவன் : வீட்டிற்கு வர வழி தெரியவில்லை ....
பூனை : !!!!!!!!!!!!! ஹி ஹி ....
No comments:
Post a Comment